உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கார் -- கன்டெய்னர் மோதி கேரள புதுமாப்பிள்ளை பலி

கார் -- கன்டெய்னர் மோதி கேரள புதுமாப்பிள்ளை பலி

துவாக்குடி:கண்டெய்னர் லாரி - கார் மோதிய விபத்தில், கேரளாவை சேர்ந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியை சேர்ந்தவர் டொனாட், 36. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அமுல்யா, 34, என்ற பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இரு நாட்களுக்கு முன், 'சான்ட்ரோ' காரில், கேரளாவில் இருந்து வேண்டுதலை நிறைவேற்ற வேளாங்கண்ணி சர்ச்சுக்கு வந்தனர்.அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கிளம்பினர். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள அரைவட்ட சாலையில் அதிகாலை வந்த போது, காரை டொனாட் ஓட்டியுள்ளார். அப்போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியதில் டொனாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அமுல்யா திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துவாக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !