உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் ரூ.138 கோடியில் புதிய பாலம்

திருச்சியில் ரூ.138 கோடியில் புதிய பாலம்

திருச்சி:திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே புதிய பாலம் கட்டப்பட உள்ளதால், பழைய பாலம் விரைவில் மூடப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு அருகே, ஏற்கனவே புதிய பாலம் கட்டப்பட்டு, திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களுக்காக மட்டும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, நெரிசல் காரணமாக, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை பைபாஸ் சாலைக்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்தப்படும் பழைய பாலம் இடிக்கப்பட்டு, 138 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. அதன்படி, திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள குறுகிய ரயில்வே மேம்பாலத்தை அகற்றி, புதிதாக அகலமான பாலம் கட்டப்பட உள்ளது. ரயில்வே நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டப் பிரிவு இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறுகையில், ''திருச்சி, ஜங்ஷன் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்காக, பழைய பாலம் இடிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போக்குவரத்தை மாநகருக்குள் இணைக்கும் முக்கிய பாலமான இதை மூடினால் நெரிசல் ஏற்படும். ''அதை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும். பத்து நாட்களில் பழைய பாலம் மூடப்படும்,'' என்றார்.பழைய பாலம் மூடப்பட்டால், சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் தலைமை தபால் அலுவலகம் சிக்னல் வழியாக மாநகரத்திற்குச் செல்லும் வகையில் டி.வி.எஸ்., டோல்கேட்டில் திருப்பி விடப்படும். திருச்சி ஜங்ஷன் பகுதியில் அமையும் புதிய பாலம், மதுரை பைபாஸ் சாலையில் நகரத்தை விட்டு வெளியேறும் வாகனங்களுக்கும், கிராப்பட்டி மற்றும் எடமலைப்பட்டி புதுார் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்லவும் பயன்படுத்தப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை