உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காளை முட்டி உரிமையாளர் உயிரிழப்பு

காளை முட்டி உரிமையாளர் உயிரிழப்பு

திருச்சி:மணப்பாறை அருகே, ஜல்லிக்கட்டு காளை முட்டியதில், அ தை வளர்த்த உரிமையாளர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து, 52; பூ வியாபாரி. இவர், வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த காளையை, வேறு இடத்தில் அவிழ்த்து கட்ட முயன்றார். காளை, அந்தோணி முத்துவை முட்டித்தள்ளியது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை