பெண்ணிடம் சில்மிஷம்; போலீஸ்காரர் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சியில், சோதனைக்கு சென்ற இடத்தில், பெண்ணிடம் தகாத முறையில் நடந்த போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.திருச்சி, எடமலைப்பட்டிபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சுல்தான், இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன், எடமலைப்பட்டி புதுாரில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மற்றும் சுல்தான் உட்பட நான்கு போலீசார் அங்கு சென்று, மர்ம நபர்களை தேடினர்.இரவு நேரம் என்பதால், அங்கிருந்த ஒரு வீட்டில் டார்ச் லைட்டை வாங்கிய சுல்தான், டார்ச் லைட் கொடுத்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை நடத்திய போலீஸ் கமிஷனர் காமினி, சுல்தானை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.