உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பெயர்ந்து விழுந்தது பள்ளி கூரை மாற்று இடம் கேட்டு போராட்டம்

பெயர்ந்து விழுந்தது பள்ளி கூரை மாற்று இடம் கேட்டு போராட்டம்

திருச்சி: அரசு துவக்கப்பள்ளி கூரை பெயர்ந்து விழுந்ததால், மாற்று இடம் கேட்டு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் 60 மாணவ - மாணவியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். நேற்று காலை, பள்ளி கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது. யாருக்கும் பாதிப்பில்லை. கூரையில் மழை தண்ணீர் கசிந்து, அபாய நிலையில் உள்ளது. இதையறிந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் சேர்ந்து, பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், துறையூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஆனந்த் பேச்சு நடத்தினார். சேதமான கட்டடத்தை இடிக்க வேண்டும்; துவக்கப்பள்ளியை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். கலெக்டரிடம் பேசி தீர்வு காண்பதாக தாசில்தார் உறுதி அளித்ததால், பெற்றோர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி