உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

திருச்சி:மது போதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர். துறையூர் அருகே, இரும்புக் கம்பியால், தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன், 46. இவருக்கு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். மகன் ராஜகுரு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஜீவன், அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து, தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த தந்தை, மகனுடன் வாக்குவாதம் செய்தார். தந்தை அடித்ததால் ஆத்திரமடைந்த மகன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தாக்கியதில், ஜீவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஜம்புநாதபுரம் போலீசார் நேற்று, ராஜகுருவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !