உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மண்வெட்டியால் தந்தையை கொன்ற மகன்

மண்வெட்டியால் தந்தையை கொன்ற மகன்

திருச்சி: திருச்சி மாவட்டம், சங்கிப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி, 85. இவரது மகன் செல்வம், 57; டெய்லர். இவரது மனைவி மலர். விவசாய கூலி தொழிலாளியான இவர், தன் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.செல்வம் சரியாக சம்பாதிக்காமல், மது குடித்து, பொறுப்பில்லாமல் இருந்துள்ளார். இதை அவரது தந்தை சின்னதம்பி கண்டித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம் போல அவர், தன் மகனை கண்டித்துள்ளார்.அப்போது, போதையில் இருந்த செல்வம், ஆத்திரத்தில், மம்பட்டியால் தந்தையை தாக்கினார். படுகாயமடைந்த சின்னதம்பி, பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை