உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணல்குவாரிகளை திறக்க போராட்டம்

மணல்குவாரிகளை திறக்க போராட்டம்

திருச்சி: கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி, திருச்சியில் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் கடந்த, 2023ல் மூடப்பட்டன. இதனால் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவால் மணல் குவாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, கனிமவள மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர், நேற்று திருச்சி மத்திய பஸ்ஸ்டாண்ட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை