உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார்

கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார்

திருச்சி: அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் திருச்சி பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மாமனாருமான எம்பாவை எஸ்.யோகநாதன் 83, வயது மூப்பால் நேற்று காலை 11:40 மணிக்கு காலமானார். இவரது மனைவி உமாபாலா, மகன் முரளிதரன், மகள்கள் நளினி, ரேணுகா, ஜெயஸ்ரீ. ரேணுகா, டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மனைவி. இறுதி சடங்கு நாளை மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது. அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர், என்.பி.கே.ஆர்.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலை (தலைஞாயிறு) கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் பொறுப்புக்களை வகித்து, விவசாயிகளுக்காக போராட்டங்களை நடத்தியவர். திருவெண்காடு பிராமண சங்க தலைவராக இருந்தவர். எம்பாவை கிராமத்தில் சர்வ சித்தி விநாயகர் கோயில் அறங்காவலராகவும், தன் ஊரில் ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலை கட்டியும் பெருமை பெற்றவர். இவரது சொந்த நிர்வாகத்தில் மங்கைமடம் வீர நரசிம்மர் கோயில் இருந்தது. பின் அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி