உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கோழி பிடிக்க வந்த குள்ளநரி கிணற்றில் விழுந்த பரிதாபம்

கோழி பிடிக்க வந்த குள்ளநரி கிணற்றில் விழுந்த பரிதாபம்

திருச்சி:மணப்பாறை குடியிருப்பு பகுதியில் கோழியை பிடிக்க வந்தபோது, தவறி கிணற்றில் விழுந்த குள்ளநரியை தீயணைப்பு துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது வீட்டு அருகிலேயே தோட்டமும் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த கோழியை பிடிக்க, நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. குள்ளநரியிடம் பிடிபடாமல் இருக்க கோழி தப்பிச் செல்ல, அந்த ரேஸில், தோட்டத்தில் இருந்த, 80 அடி கிணற்றில் குள்ளநரி தவறி விழுந்தது. கிணற்றில், 60 அடி வரை தண்ணீர் இருந்ததால், தண்ணீரில் விழுந்த குள்ளநரி மிதந்து, கிணற்றில் திட்டுப்பகுதியில் ஏறி நின்றி, மேலே ஏற முடியாமல் தவித்துள்ளது. கிணற்றில் நரி இருப்பதைப் பார்த்த இளையராஜா குடும்பத்தினர், மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடம் வந்து, கடும் போராட்டத்துக்கு பின், குள்ளநரியை பிடித்து, அங்குள்ள காட்டுப்பகுதியில் விட்டனர். குடியிருப்பு பகுதிக்கு நரி வந்தது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை