உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சிறுமி பாலியல் பலாத்காரம் திருடனுக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் பலாத்காரம் திருடனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி:தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன், 33. இவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2022ம் ஆண்டு, திருச்சி கே.கே.நகரில் உள்ள வீட்டின் உள்ளே நுழைந்த முகமது உசேன், 45 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.அவர் வயிற்றில், ஆப்பரேஷன் செய்திருந்ததால், அருகில் படுத்திருந்த, அவரின், 17 வயது மகளை, கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் வழக்கை விசாரித்து, முகமது உசேனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி