உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காரில் சென்று ஆடு திருடியவர்கள் கைது

காரில் சென்று ஆடு திருடியவர்கள் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடியைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவர் கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் கலியமூர்த்தி தன் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தில், தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.அப்போது, 'ரோனால்ட்' காரில் வந்த இருவர், மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து, காரில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து கலியமூர்த்தி நவல்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில் நடந்த ஆட்டுச்சந்தைக்கு சென்ற கலியமூர்த்தி, தன் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளனவா என பார்த்தார். அவர் எதிர்பார்த்தது போலவே, அவரது ஆடுகளை வைத்திருந்த இருவர், அவற்றை விற்க முயன்றனர். அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவர்களை பிடித்த கலியமூர்த்தி, இருவரையும் நவல்பட்டு போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் அவர்களை கைது செய்து, ஆடுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கார் மற்றும் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே காத்திரப்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெகன்நாதன், 39; சிவக்குமார், 28, என்பதும், ஆடுகள் திருடி விற்பதையே வழக்கமாகக் கொண்டவர்கள் என்பதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ