வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போ மாடல் ஆட்சியில் யார் என்ராலுலும் சுட்டு பிடித்தல் மட்டுமே தகவல்
திருச்சி: திருச்சியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை, போலீசார் சுட்டு பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. திருச்சி, பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன், 25, என்பவர், நேற்று காலை, போலீஸ் குடியிருப்பில், எஸ்.எஸ்.ஐ., வீட்டுக்குள், ஐந்து பேர் கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில், இளமாறன் என்ற குற்றவாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மீதியுள்ள நான்கு குற்றவாளிகளில், முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார் உட்பட, நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முக்கிய குற்ற வாளியான சதீஷ்குமார் மட்டும், ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வாட்டர்டேங்க் பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், அவரை போலீசார் பிடிக்க முயன்றதாகவும், அப்போது அவர், வில்லியம், மாதவராஜ் ஆகிய போலீசாரை வாளால் தாக்கியதாக கூறப்படுகிறது . இதையடுத்து, சதீஷ்குமாரை காலில் சுட்டு போலீசார் பிடித்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் பட்ட போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இப்போ மாடல் ஆட்சியில் யார் என்ராலுலும் சுட்டு பிடித்தல் மட்டுமே தகவல்