மேலும் செய்திகள்
மனைவிக்கு அடி கணவனுக்கு சிறை
06-Apr-2025
திருச்சி:திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் நவீனா, 28. கணவரை பிரிந்து, 5 வயது ஆண் குழந்தையுடன் வசிக்கும் இவர், ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, நவீனா வீட்டில் தங்கியிருந்த நாசர் அலி, நாகமங்கலத்தை சேர்ந்த வேலுமணி, 29, என்பவருடன் சேர்ந்து, நேற்று காலை நவீனாவின் 5 வயது மகனை, காரில் சுரக்குடிபட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மது அருந்திய நாசர் அலி, வேலுமணி, சிறுவனை கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி உள்ளனர். பின்னர், சிறுவனை அடித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.இதைப்பார்த்த, அப்பகுதி மக்கள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார், நாசர் அலி, வேலுமணி மீது போக்சோ வழக்கு பதிந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
06-Apr-2025