உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அமைச்சர் நேரு பேனரில் மோதி வாலிபர் படுகாயம்

அமைச்சர் நேரு பேனரில் மோதி வாலிபர் படுகாயம்

திருச்சி: அமைச்சர் நேருவின் பிறந்த நாளுக்காக, மீடியனில் வைக்கப்பட்ட பேனரில் மோதி, பைக்கில் வந்த வாலிபர் படுகாயமடைந்தார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர். மணப்பாறை சர்ச் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள சாலையின் மீடியனிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மதியம் பைக்கில் வந்த பாட்னாபட்டியைச் சேர்ந்த அஜீத் என்ற வாலிபர், மண்டிக்கடை பகுதியில் மீடியனில் இருந்த பேனரில் மோதி, பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் மது போதையில் இருந்ததாக, அவரை மீட்டவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி