உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / சில்மிஷ அரசு டாக்டர் சஸ்பெண்ட்

சில்மிஷ அரசு டாக்டர் சஸ்பெண்ட்

வேலுார் : வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு டிப்ளமா நர்சிங் படிக்கும் மாணவி, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சி முடிந்தவுடன் அதற்கான சான்றிதழில் கையெழுத்து பெற, குடியாத்தம் தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் பாபுவை சந்தித்தார்.அப்போது, பாபு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். குடியாத்தம் டவுன் போலீசார் இரு நாட்களுக்கு முன் அவரை கைது செய்தனர். இந்நிலையில், அவரை 'சஸ்பெண்ட்' செய்து, தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை