உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பைக் விபத்தில் கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி

பைக் விபத்தில் கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி

வேலுார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் டவுன் பிச்சனுாரை சேர்ந்தவர் பிரதீப், 18, குடியாத்தம் அரசு திருமகள் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்தார். நரிக்குள்ளப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் கோபி ரகுராம், 18. கோவையில் கல்லுாரி முதலாமாண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள்.விடுமுறையில் கோவையிலிருந்து வந்திருந்த கோபி ரகுராம், தன் நண்பர் பிரதீப்புடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, 'பல்சர்' பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.கோபி ரகுராம் பைக்கை குடியாத்தம் அருகே ஓட்டிச் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதாமல் இருக்க, திடீரென பிரேக் போட்டார். இதில், பைக் கவிழ்ந்ததில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயமடைந்த கோபிராம், வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று அதிகாலை இறந்தார். குடியாத்தம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ