மேலும் செய்திகள்
சிறுமியர் பலாத்காரம் இருவருக்கு '20 ஆண்டு'
24-Jan-2025
காட்பாடி:வேலுார், காட்பாடி சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரைச் சேர்ந்த பெண் டாக்டர், நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டர் இருவரும் 2022 மார்ச், 16ல் காட்பாடியில் சினிமா பார்த்து விட்டு அறைக்கு திரும்பினர். வழியில் இருவரையும் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில், வேலுார், பாலாறு பகுதிக்கு கடத்தி, 40,000 ரூபாய், 2 சவரன் நகை மற்றும் மொபைல்போனை பறித்தனர். பின்னர், ஆண் டாக்டரை தாக்கி, பெண் டாக்டரை அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து தப்பினர்.பெண் டாக்டர் ஆன்லைனில், வேலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் அளித்தார். வேலுார் வடக்கு போலீசார், சத்துவாச்சாரி வ.உ.சி., நகர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன், கூலித்தொழிலாளி மணிகண்டன், பரத், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேரை கைது செய்தனர்.வேலுார் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, குற்றவாளிகளுக்கு தலா, 20 ஆண்டுகள் சிறை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
24-Jan-2025