உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / போதை மாத்திரை, ஊசி விற்க முயன்ற 5 பேர் ௹கைது

போதை மாத்திரை, ஊசி விற்க முயன்ற 5 பேர் ௹கைது

பள்ளிகொண்டா:பள்ளிகொண்டாவில், அரசு பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி விற்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா ராமபுரம் பகுதியில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவர், ஊசி, போதை மாத்திரைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இருவரையும் விசாரித்ததில், சின்னசேரியை சேர்ந்த விக்னேஷ், 25, வேப்பங்கால் ரோடு பகுதியை சேர்ந்த ஆனந்தன், 22, என, தெரியவந்தது. இவர்களது நண்பர்களான, வேப்பங்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24, ராஜி, 23, மல்லா, 35, ஆகியோரும் போதை மாத்திரை, ஊசிகளை பயன்படுத்தி போதைக்குள்ளாவதும், போதை மாத்திரைகளை மாணவர்களுக்கு குறி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள், இரண்டு கத்தி மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை