உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / முதியவர் வெட்டி கொலை மனைவிக்கு கத்திக்குத்து

முதியவர் வெட்டி கொலை மனைவிக்கு கத்திக்குத்து

வேலுார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வி.மோட்டூரை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி குணசேகரன்,62, இவரது மனைவி மகேஸ்வரி, 55. இவர்களின் எதிர் வீட்டை சேர்ந்தவர் லாரி டிரைவர் மகேந்திரன், 30. நேற்று முன்தினம் இரவு, மகேஸ்வரி வீட்டின் முன் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தினார்.அப்போது அவ்வழியாக வந்த மகேந்திரன், மகேஸ்வரி மீது இடிப்பது போல வந்தார். இதை மகேஸ்வரி தட்டி கேட்டார்.மகேஸ்வரிக்கு ஆதரவாக கணவர் குணசேகரனும் இது குறித்து கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த மகேந்திரன் திடீரென குணசேகரன், மகேஸ்வரி ஆகியோரை கத்தியால் வெட்டினார். இதில் குணசேகரன் பலியானார். மகேஸ்வரி, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரதராமி போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி