மேலும் செய்திகள்
பிறந்த இரண்டே நாட்களில் பெண் குழந்தை விற்பனை
30-May-2025
வேலுார், வேலுார் அருகே, டாக்டர்கள் அறிவுரையை அலட்சியம் செய்ததால், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், தாய் உயிரிழந்தார். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த ஜார்தான்கொல்லை பஞ்., உட்பட்ட கன்சிபுதுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 31, கூலித்தொழிலாளி. இவர் மனைவி சுசிலா, 29. ஏற்கனவே, 2 குழந்தைகள் உள்ள நிலையில் சுசிலா மீண்டும் கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் பிரசவத்திற்கு, ஒடுகத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் சுசிலாவிற்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. இதனால், மேல் சிகிச்சைக்கு அவரை ஆம்புலன்ஸ் மூலம், வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.இது குறித்து ஒடுகத்துார் டாக்டர்கள் கூறுகையில், 'பிரசவ தேதியின், 3 நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு வர சுசிலா மற்றும் அவரது கணவரிடம் கூறியிருந்தோம். ஆனால், அவர்கள் வர மறுத்து விட்டனர். இது போன்ற சம்பவங்கள் மலை கிராமத்தில் நடக்கிறது. நாங்களும் பிரசவம் தொடர்பாக பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனாலும் மலை கிராம மக்கள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கின்றனர். இதனால், அவ்வப்போது சிசு மரணம், தாய் மரணம் நிகழ்கிறது' என்றனர்.
30-May-2025