உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / சுடுகாடு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சுடுகாடு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த குப்புரெட்டியூர் கிராம மக்கள், இறந்தவர்களின் உடல்களை பாலாற்றில் புதைப்பது வழக்கம். ஆனால், சடலம் கொண்டு செல்ல சரியான பாதை இல்லாததால், தனியார் நிலத்தின் வழியாக எடுத்துச் சென்று, அடக்கம் செய்து வருகின்றனர்.தனியார் நிலம் முழுதும் தற்போது முட்புதர்கள் நிறைந்துள்ளதால், அந்த வழியாக உடல்களை இறுதி சடங்கிற்கு எடுத்துச் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கள் கிராமத்திற்கு ஏரியின் அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான இடத்தில், தனி சுடுகாடு அமைக்க, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நரசிம்மன், 80, நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை கொண்டு செல்வதில், சாலை வழியின்றி கடும் சிரமம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கிராம மக்கள், வள்ளிமலை - பொன்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேல்பாடி போலீசார் சமாதானப் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மறியலை கைவிடச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை