உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  சாரம் சரிந்து மூவர் பலி

 சாரம் சரிந்து மூவர் பலி

திருவலம்: வேலுார் மாவட்டம், திருவலம் அடுத்த, மஞ்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ., சீயோன் சர்ச் முதல் தளம் கட்டும் பணி நேற்று நடந்தது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென சாரத்துடன் கான்கிரீட் தளமும் சரிந்து விழுந்ததில், இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கினர். திருவலம் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பெங்களூரை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் ஜான், 39, மற்றும் பலத்த காயமடைந்த ஆந்திர தொழிலாளிகள் இமானுவேல், 45, சாமுவேல், 45, ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் காயமடைந்தனர். திருவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ