உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு தொல்லை கீழே தள்ளிய இருவர்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு தொல்லை கீழே தள்ளிய இருவர்

வேலுார்:ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்த, 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றுகிறார். இவர், நேற்று தன் சொந்த ஊரான சித்துாருக்கு செல்வதற்கு, கோவை - திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, இரண்டு பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வேலுார் அடுத்த கே.வி.குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்போது, அந்த, 4 மாத கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து இருவரும் கீழே தள்ளி விட்டனர். பெண், அங்கேயே மயங்கினார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த கர்ப்பிணியை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ