உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கோவில் குளத்தில் நள்ளிரவில் நீராடி பெண்கள் வழிபாடு

கோவில் குளத்தில் நள்ளிரவில் நீராடி பெண்கள் வழிபாடு

வேலுார்: வேலுார் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் மரகாதம்பிகை உடனுறை மார்க்க பந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிம்ம குளத்தில் பிரம்மன் நீராடி, சிவபெருமான் சாபத்தை போக்கி கொண்ட-தாக தலபுராணங்கள் கூறுகின்றன. இந்த சிம்ம குளத்தில், ஆதி சங்கரரால், பீஜாட்சர யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நள்ளிரவு, 12:00 மணிக்கு குளத்தில் பெண்கள் நீராடி, ஈர உடையுடன் கோவில் வளாகத்தில் படுத்து உறங்கினால், குழந்தை இல்லாத பெண்க-ளுக்கு குழந்தை பேறு கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினை அகலும் என்பது நம்பிக்கை. இதன்-படி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிம்மகுளத்தில் பெண்கள் நீராடி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ