உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ரேபிஸ் தொற்று பாதித்து தொழிலாளி உயிரிழப்பு

ரேபிஸ் தொற்று பாதித்து தொழிலாளி உயிரிழப்பு

வேலுார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அருகே நாய் கடித்து பாதிக்கப்பட்ட நபர், 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்தார். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி, 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா, 40; தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். 8ம் தேதி, வீட்டிற்கு கருணாநிதி நடந்து வந்து கொண்டிருந்தபோது, தெரு நாய் ஒன்று அவரை கடித்தது. அதற்கு, அவர் சிகிச்சை எடுக்காமல், காலம் கடத்தி வந்தார். நாய் கடித்த இடத்தில் அவருக்கு வலி அதிகமாக இருந்ததால், வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி ம ருத்துவமனையில், கருணாநிதியை கடந்த 18ல் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு, 'ரேபிஸ்' நோய் இருப்பதை உறுதி செய்தனர். இதனால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி