மேலும் செய்திகள்
செங்கையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
08-Sep-2024
விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள 1,500 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபட இந்து முன்னணி மற்றும் விழா குழுவினர் மூலம் காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டது.இதன் மூலம், மாவட்டத்தில், நேற்று 1,500 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு போலீசார் மூலம் அனுமதி வழங்கினர்.அதன் பேரில், வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு, 1,700 போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சிலைகள், வரும் 9ம் தேதி கடல் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.
08-Sep-2024