உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகள் விசாரிக்க அனுமதி

பொன்முடி மீதான குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகள் விசாரிக்க அனுமதி

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், கூடுதல் சாட்சிகள் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில், 51 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 30 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதனால், வழக்கில் கூடுதல் சாட்சி விசாரிக்க அனுமதி கோரி அரசு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் சாட்சிகள் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், இதற்காக மேல்விசாரணை செய்து, போலீசார் கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VENKATASUBRAMANIAN
செப் 03, 2024 07:19

எத்தனை காலம்தான் இப்படியே இழுத்துக்கொண்டு செல்வீர்கள். இதனாலேயே கொள்ளையடிப்பவர்கள் அதிகமாகி கொண்டு வருகிறார்கள். அடுத்தவருக்கு பயம் வர வேண்டும். பொன்முடி ஜாலியாக அனுபவிக்கிறார். ஆனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை