உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு பயிரில் வெள்ளை வேர் புழு வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

கரும்பு பயிரில் வெள்ளை வேர் புழு வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த எதப்பட்டு கிராமத்தில் கரும்பு சாகுபடியில் வெள்ளை வேர்புழு தாக்குதலை வேளாண் விஞ்ஞானிகள் , வேளாண் அதிகாரிகள் கூட்டு வயல் ஆய்வு மேற்கொண்டனர்.கடலுார், திண்டிவனம் வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி, பாதிக்கப்பட்ட கரும்பு பயிரை பார்வையிட்டார். இதன் ஆரம்ப அறிகுறிகள் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி திட்டு, திட்டாக காய்ந்து விடும். இதன் தாக்குதல் மறுதாம்பு பயிரில் அதிகமாக இருக்கும்.வெள்ளை வேர் புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடையில் அதிக நீர் பாய்ச்ச வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிளிகம் பூச்சி கொல்லியை ஏக்கருக்கு 2 கிலோ , 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வேர் பகுதிகளில் துாவ வேண்டும்.இமிடாக்ளோபிரிக்ட் மருந்தினை லிட்டருக்கு அரை மில்லி வீதம் கலந்து தெளிப்பு அல்லது வேர் பகுதியில் 12 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும்.இதனை 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும். மேலும், பயிர் அதிக பாதிக்கப்பட்டிருந்தால் பயிர் சுழற்சி முறையாக நெல் பயிர் சாகுபடி செய்யலாம் என விவசாயிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.ஆய்வின் போது வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி, பூச்சியியல் துறை துணை பேராசிரியர் செந்தமிழ், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !