உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., ஆளும் காலம் வந்து விட்டது குள்ளஞ்சாவடியில் அன்புமணி பேச்சு

பா.ம.க., ஆளும் காலம் வந்து விட்டது குள்ளஞ்சாவடியில் அன்புமணி பேச்சு

குள்ளஞ்சாவடி : கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் ஊராட்சியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்று, தனது எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.,8 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். மாணவர்கள் படிப்பிற்கும், வேலை வாய்ப்பிற் கும் வைக்கப்பட்ட அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அவர்கள் மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். அனைத்து தகுதிகளும் கொண்ட நமது கட்சி ஆட்சி அமைக்கும் காலம் வந்து விட்டது. மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தொடர்ந்து நாம் பேசி வருகிறோம்.வன்னியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தான் அதிக அளவில் டாஸ்மாக் வியாபாரம் நடக்கிறது. இது மாற வேண்டும். பா.ம.க., ஆளும் காலம் வந்துவிட்டது. அது உங்களால் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி