உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சோதனைச்சாவடியில் கலால் அதிகாரிகள் தணிக்கை

சோதனைச்சாவடியில் கலால் அதிகாரிகள் தணிக்கை

வானூர்: வானூர் அருகேயுள்ள பட்டானூர் சோதனைச்சாவடியில், கலால் அதிகாரிகள் திடீரென வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில் பட்டானூர் சோதனைச்சாவடியில், உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.அப்போது, அந்த வழியாக சாராயம், மதுபாட்டில் கடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இருசக்கர வாகனங்கள், பஸ் மற்றும் வேன்களில் கண்காணித்து, மதுபாட்டில்கள் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலால் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.மேலும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது திண்டிவனம் கோட்ட கலால் அலுவலர் கோவர்தனன், வருவாய் ஆய்வாளர்கள் தஸ்தகீர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ