உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா

அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.சிந்தாமணி, பனையபுரம் அரசு பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, டி.இ.ஓ., இளமதி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியைகள் சுசீலா, சுமித்ரா தேவி வரவேற்றனர்.விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 413 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.பா.ம.க., மாநில துணைத் தலைவர் அன்புமணி, ஒன்றிய செயலாளர் ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஊராட்சி தலைவர்கள் வாசுகி புருேஷாத்தம்மன், காந்த ரூபீ, ராஜசேகர், பாரதி, வேல்முருகன், பி.டி.ஓ.,கள் பாலச்சந்திரன், குலோதுங்கன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ