உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லயன்ஸ் சங்கங்களின் ரத்த தான முகாம் 

லயன்ஸ் சங்கங்களின் ரத்த தான முகாம் 

திண்டிவனம், : திண்டிவனத்தில் அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது. திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டை நாடார் மண்டபத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் சங்கம், டாக்டர் அப்துல் கலாம் நண்பர்கள், கல்பனா லியோ சங்கம், திண்டிவனம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாமை நடந்தது. முகாமிற்கு சங்கத்தின் தலைவர் சக்திவேல், லியோ தலைவர் பத்ம நாபன் தலைமை தாங்கினர். லியோ மாவட்டத் தலைவர் சரவணன், டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு மண்டல தலைவர் வடிவேலு, ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், வட்டார தலைவர் சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முகாமில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன் ரமேஷ், ஆசிரியர் வெங்கடேசன், காமராஜ், துரை, சைமன் துரைசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் 37 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி