உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா மகா சிவராத்திரியான இன்று 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. நாளை 27ம் தேதி காலை 10:30 மணிக்கு மயானக் கொள்ளை உற்சவமும், இரவு அம்மன் ஆண் பூத வாகனத் தில வீதியுலாவும் நடக்கிறது.தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. மார்ச் 2ம் தேதி மாலை 3:00 மணிக்கு தீமிதி விழாவும், 4ம் தேதி மாலை 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 7ம் தேதி இரவு 10:30 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை