உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டுமனை தகராறு 4 பேர் மீது வழக்கு

வீட்டுமனை தகராறு 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : வீட்டு மனை தகராறில் தம்பதியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த குயவன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 40; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஐயனார். இவர்களது வீட்டின் இடையே செல்லும், 2 அடி இடம் குறித்து முன்விரோதம் உள்ளது.கடந்த 5ம் தேதி, ராமச்சந்திரனின், புதிய வீட்டில் ஜன்னல் வைத்து கட்டுமானப் பணி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐயனார் குடும்பத்தினர் தகராறு செய்து, ராமச்சந்திரன், அவரது மனைவி ராதிகாவையும், தாக்கினர். புகாரின் பேரில், ஐயனார், தொப்பையன், பசுபதி, எத்திராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை