உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திண்டிவனம் : ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.ஒலக்கூரில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான், பேச்சாளர் சுஜாதா சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், பழனி, நகர செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி.மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, மகளிர் அணி சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர். விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dharmavaan
மார் 09, 2025 08:35

இப்படி தடபுடலாக எந்த முதல்வராவது கொண்டாடுகிறார்களா .கொத்தடிமைகள் தன் விசுவாசத்தை இப்படி காட்டுகின்றன


சமீபத்திய செய்தி