உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரவுடிகள் மோதல் ஒருவர் கைது

ரவுடிகள் மோதல் ஒருவர் கைது

விழுப்புரம், : விழுப்புரத்தில், இரு ரவுடிகளிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற பங்க் ராஜா, 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் மந்திமணி என்கிற மணிவண்ணன்,30: பிரபல ரவுடிகளான இருவரும் நண்பர்களாக உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இருவரும் மது அருந்தியபோது வாய்த்தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் ராஜா, கீழ்பெரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் நின்றிருந்தார். அங்கு வந்த மந்திமணி, ராஜாவிடம் தகராறு செய்து, தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, மந்திமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை