மேலும் செய்திகள்
கடும் பாறை சிலையாகுமே ... குரு போதனை உளியாகுமே !
01-Sep-2024
விழுப்புரம் : ஆசிரியர் தினம், சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் செய்திக்குறிப்பு:'நாட்டின் மாற்றங்கள் வகுப்பறைகளே; நுாறு சதவீதம் எழுத்தறிவை நோக்கி தமிழகம்' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு கட்டுரை போட்டியும், 'கல்வியில் மாற்றங்கள்; கல்வியால் மாற்றங்கள்' தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை போட்டியும் நடக்கிறது.'எழுத்தறிவு நேற்று இன்று நாளை' தலைப்பில் ஓவிய போட்டியும் நடைபெற உள்ளது. இந்த படைப்புகள் அனைத்தும் வரும் 17ம் தேதிக்குள் ஆசிரியர் தின கட்டுரை போட்டிக்கு, அய்யனார், மொபைல் 6374688744 எண்ணிற்கும், கவிதை போட்டிக்கு சுகதேவ் 9659990091, ஓவிய போட்டிக்கு சண்முகசாமி 9443534321 எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவதோடு, முதல் 3 இடங்களைப் பெறும் படைப்பாளர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.
01-Sep-2024