உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் வியாபாரிகளுக்கு தொடரும் நெருக்கடி

விழுப்புரத்தில் வியாபாரிகளுக்கு தொடரும் நெருக்கடி

விழுப்புரம் : விழுப்புரத்தில் வணிகர்களுக்கு தொடரும் வியாபாரம் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.விழுப்புரத்தில் வணிகர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய மூத்த நிர்வாகிகள், விழுப்புரத்தில் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில் போட்டியும், அதனுடன் ஆன் லைன் வர்த்தகமும் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.விழுப்புரத்தின் முக்கிய மார்க்கெட் வீதிகளான காந்தி வீதி, பாகர்ஷா வீதி, நேருஜி சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவ னங்கள் இயங்கி வருகிறது. இந்த வீதிகளில் சாலையோர தள்ளு வண்டி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் என கடைகளுக்கு முன்பு வைத்துள்ளதால் வியாபாரம் பாதிக்கிறது.இது குறித்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு போட்டு, நீதிமன்றமும், நடை பாதை தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் வழங்கவும், ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்றவும் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட முக்கிய அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்தது.ஆனால், இப்போது வரை நடவடிக்கை எடுக் காமல் அதே பிரச்னையும், வியாபாரமும் பாதிக்கிறது. விழுப்புரத்தில் தான் வியாபாரிகளை மிரட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. ஏற்கனவே எம்.ஜி.ரோடில் கடைக்கு வந்த ஒரு அப்பாவி வியாபாரியை, கஞ்சா வாலிபர்கள் குத்தி கொலை செய்தனர்.இரு தினங்களுக்கு முன் கே.கே.ரோடில் பல சரக்கு கடையில் புகுந்து, காது கடுக்கன் கேட்டு கடைக்காரிடம் தகராறு செய்த கஞ்சா வாலிபர், கடையில் மண்ணெண்ணை ஊற்றி மிரட்டியதோடு, கல்வீசி கண்ணாடியும் சேதப்படுத்தியுள்ளார்.கடந்த மாதம் குட்கா விற்றதில் கைதான ஒரு பெண், பிளாஸ்டிக் பொருள் விற்கும் கடையில் தான் குட்கா வாங்கியதாக பொய் கூறியதால், அந்த கடைகாரர் மீது போலீசார் வழக்கு போட முயன்றனர். விசாரித்ததில், அந்த பெண் வளவனூர் பகுதியிலிருந்து குட்கா எடுத்து வந்து விற்பதும், பிடிபட்டால், ஏதாவது ஒரு கடையில் வாங்கியது என பொய் சொல்லி மாட்டிவிடும் வாடிக்கையாக வைத்திருந்தது தெரிந்தது.தற்போது வெளியூர் கும்பல், விழுப்புரத்தில் கடையில் தின்பண் டத்தை வாங்குவது, அதில் ஏதாவது கிடப்பதாக பொய் சொல்லி மிரட்டி பணம் பறிக்கின்றனர். பல கடைகளில் கைவரிசை காட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. முக்கிய வீதிகளில் போராட்டம், பொதுக்கூட்டம், மறியல் என நடத்துகின்றனர். இப்படி நெருக்கடிகள் தொடர்வதால், வியாபாரிகள் தவிப்பில் உள்ளனர். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், வியாபாரிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ