உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தலித் இயக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தலித் இயக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் வேலுமூர்த்தி தலைமை தாங்கினார். சமத்துவம் மற்றும் விடுதலை கட்சி நிறுவன தலைவர் தீபன், சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி தலைவர் கமல் முன்னிலை வகித்தனர். சட்டப்புலிகள் பேரவை நிறுவன தலைவர் சத்தியராஜ் வரவேற்றார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து போராடுவோர் மீது போட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை