உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்து முன்னணி பேரியக்கம் விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்து முன்னணி பேரியக்கம் விநாயகர் சிலை பிரதிஷ்டை

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலை வழிபாடு நடந்தது.மாநில செயற்குழு உறுப்பினர் பாலு தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சிவா, மாவட்ட தலைவர் சதீஷ், பொது செயலாளர் சுரேஷ் துரைராஜ், பொருளாளர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கட் தரணிதரன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமு, பொறுப்பாளர்கள் பழனி ஆகியோர் விநாயகர் சிலைக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.நிகழ்ச்சியில், பா.ஜ., நிர்வாகிகள் கலியவரதன், தியாகராஜன், சுகுமார், சதாசிவம், வடிவேல் பழனி, ரகு, வி.சி., நிர்வாகி அசார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை