அரசு பள்ளி மாணவிகளுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயந்தி துணை பி.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் பள்ளி மாணவியருக்கு 'தினமலர் - பட்டம்' நாளிதழை வழங்கி அதன் சிறப்புகளை விளக்கினார். பின், பட்டம் இதழை மாணவிகளுக்கு வழங்கினார். இதில், ஊராட்சி செயலாளர் அனந்தராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.ஆசிரியர் ராஜாத்தி நன்றி கூறினார்.