உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கல்

மத்திய அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கல்

செஞ்சி: செஞ்சியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க., வினர் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.செஞ்சி, ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது. கல்விக்கு நிதி வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பது ஆகியவற்றை கண்டித்து செஞ்சி கூட்ரோட்டில் ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மஸ்தான் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், ராஜாராமன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி, அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை, கதிரவன், ராமதாஸ், தொண்டரணி பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ