மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பரிசளிப்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தில் நமது சிலம்பம் மற்றும் நேரு யுவேக்கேந்திரா இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை நடத்தின. மாவட்ட இளையோர் அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர் பிரியா பூபாலன், ஆலோசனைக் குழு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் சுரேந்தர் வரவேற்றார்.போட்டியில் வெற்றி பெற்ற 30 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கவி பாரதி, தனுசு ஆகியோர் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா காந்த், சதீஷ், தன்னார்வலர் கலியபெருமாள் மற்றும் மாவட்டத்தில் 15 கிராமங்களில் இருந்து சிலம்பம் கற்ற சிறுவர்கள் குழுவினர் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர்.