உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேச்சாளர் தமிழ்தாசன் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அண்ணாதுரை, வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் மனோசித்ரா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ேஹமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் திண்டிவனம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.இந்த குடும்பங்களில் ஸ்டாலின்தான் வர்றார், விடியல் தரப்போறார் என்ற குரல் கேட்கும். ஆனால், சில பேருக்கு விடியவே இல்லை. இது யார் என்று உங்களுக்கு தெரியும்.முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம், இந்த ஆட்சியை விடியா ஆட்சி என பேசி வருகிறார். அவர் பாதி ராத்திரியில படுக்கிறார். மறுநாள் இரவு பத்து மணிக்குதான் எழுகிறார். அதனால் விடிவது அவருக்கு தெரியாது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ