உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு முறையில் கட்டண வசதி

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு முறையில் கட்டண வசதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில், மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருள்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.வேளாண் இணை இயக்குனர் சீனுவாசன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம், விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், பருமழை காலம் தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள், அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.விரிவாக்க மையங்களில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்களை, இனி ஏ.டி.எம்., கார்டு, மற்றும் மின்னணு வசதிகள் கொண்ட மின்னணு பரிவர்த்தனை மூலம், அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விரிவாக்க மையங்களிலும் பணமில்லாத மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இடுபொருள்கள் வாங்க வரும் விவசாயிகள் முழு தொகை அல்லது மானிய பங்களிப்பு தொகையினை ஏ.டி.எம். கார்டு அல்லது ஜிபே, போன்பே ஆப்கள் மூலம் கட்டணத்தை செலுத்தி, பொருள்களை வாங்கிச் செல்லலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ