உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழில் முனைவோர் கருத்தரங்கம்

தொழில் முனைவோர் கருத்தரங்கம்

மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் தொழில் மேம்பாட்டு குழு சார்பில் கருத்தரங்கம் நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற்றினார். உதவி பேராசிரியர் ஷீலா ராணி வரவேற்றார்.விழுப்புரம் மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு குழு திட்ட மேளாளர் சீனிவாசன் தொழில் துவங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், அவற்றை கையாளும் முறை, வெற்றிகரமாக தொழில் நிறுவனத்தை நடத்தும் முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் அன்பழகன், அனுராதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி