இ.எஸ்., ஹெல்த் மற்றும் ஹாலிடே ேஹாம் திறப்பு
விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் வழுதரெட்டி சாலையில் இ.எஸ்., ெஹல்த் மற்றும் ஹாலிடே ேஹாம் (இயற்கை முறை மருத்துவம்) திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, இ.எஸ்., மருத்துவமனை தலைவர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். வி.வி.ஏ., குரூப்ஸ் சேர்மன் குபேரன், இ.எஸ்., ெஹல்த் மற்றும் ஹாலிடே ேஹாமை திறந்து வைத்தார்.இங்கு, பிசியோதெரபி, ஆயுஷ்தெரபி, ைஹட்ரோ தெரபி, யோகா மற்றும் தியானம், ஆரோக்கியமான உணவு, ஏரோபிக் உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, அக்குபஞ்சர், வாழை இலையால் குளியல், மண் குளியல், மூலிகை குளியல், விளையாட்டு பயிற்சிகள் உள்ளது.உடல் எடை குறைத்தல், பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, தீராத மூட்டுவலி, முதுகு வலி, தீராத தோல் பிரச்னைகள், இடுப்பு வலி, இடுப்பு எலும்பு தேய்மானம் பிரச்னைகளுக்கு இங்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.இ.எஸ்., குரூப்ஸ் நிறுவன தலைவர் சாமிக்கண்ணு, கல்லுாரி செயலாளர்கள் செல்வமணி, செந்தில்குமார், டாக்டர்கள் மோனிஷா, வசந்த், தேவி, நீலா உட்பட பலர் பங்கேற்றனர்.