உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

மயிலம், ; சாலையை கடக்க முயன்ற விவசாயி கார் மோதி இறந்தார்.மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி,60; விவசாயி. இவர் நேற்று காலை 5:30 மணிக்கு வீட்டில் இருந்து நிலத்திற்க மாட்டை ஓட்டிச் சென்றார். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார் மோதியது.அதில் படுகாயமடைந்த சின்னசாமி இறந்தார். அவர் ஓட்டிச் சென்ற பசுமாடும் இறந்தது. மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ