உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னல் தாக்கியதில் விவசாயி கால்கள் செயலிழப்பு

மின்னல் தாக்கியதில் விவசாயி கால்கள் செயலிழப்பு

செஞ்சி; செஞ்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி கால்கள் செயலிழந்தன.செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் வேலியப்பன் மகன் வேலு 35. விவசாயி.இவர், நேற்று மதியம் 2.30 மணியளவில் அதே பகுதில் விவசாய நிலத்தில் மாடு கட்ட சென்று கொண்டிருந்தார். அப்போது லேசான மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையினால் ஏற்பட்ட மின்னல் தாக்கி வேலு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து மயக்கம் தெளிவித்தனர். மயக்கம் தெளிந்த வேலுவுக்கு நடக்க முடியாமல் இரண்டு கால்களும் செயலிழந்தன. இதையடுத்து வேலுவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !